April 29, 2015

மனம்வருந்தி மன்றாடும் தமிழ் ஏதிலி! ( வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவிலே அகதித் தஞ்சம் கோரிய தமிழ் ஏதிலிப் பெண்ணொருவர் விரக்தியின் விளிம்புநிலையில் நின்று தனக்கான நீதிக்காக மன்றாடும் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ்க்குரல் வானொலிக்கு இச்செவ்வி வழங்கப்பட்டுள்ளது,

ரதினி எனப்படும் இந்த ஈழத்துப்பெண் தனது மூன்று வயதுக் குழந்தையுடன் படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி கடந்த ஆண்டு வருகைதந்திருந்தார்.இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரிவந்திருந்த நிலையில் தாயகத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஆபத்துக்களையும் தொடர்ந்தும் எதிர்கொண்டதால் தனது குழந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாகப் புறப்பட்டார் ரதனி.அவுஸ்திரேலிய அரசின் புதிய குடவரவுச் சட்டத்தின்படி இத்தாயும் பிள்ளையும் நஃறு என்ற தீவிலே இருக்கும் முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள். ரதனியின் கணவர் அவுஸ்திரேலியப் பெருநிலப்பரப்பின் மெல்பேர்ண் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தனது கணவனைப் பார்க்கமுடியாமல், தற்போது நான்கு வயதடையும் குழந்தையுடன், வாழ்வதற்கு ஒவ்வாத நஃறு தீவிலே அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் ரதினி  தனது ஆற்றாமையின் விளிம்புநிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் தமிழ்க்குரல் வானொலிக்கு அவர் வழங்கிய உள்ளத்தை உருக்கும் செவ்வி வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலிய குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தோடு தொடர்புள்ளவர்கள், செல்வாக்குள்ளவர்கள், தமிழ் அமைப்புக்கள் இவ்விடயத்தில் கரிசனையோடு செயற்பட்டு ரதினியின் குடும்பம் இணைய வழிவகை செய்யும்படி வேண்டப்படுகிறார்கள்.

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரின் தொடர்புகள்:
Peter Dutton MP
Minister for Immigration and Border Protection
PO Box 6022
Parliament House
Canberra ACT 2600
Email: minister@immi.gov.au 

தமிழ் ஏதிலிகள் கழகத்தின் மின்னஞ்சல்: TamilRefugeeCouncil@gmail.com


No comments:

Post a Comment