தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என வெளியாகும்
கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், சிங்கள ஊடகமொன்று பாதுகாப்பு செயலாளரிடம் இந்த விடயம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிரபாகரன் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் விடயத்தை தான் நம்பவில்லை என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரபாகரனின் மரணச் சான்றிதழை வெளியிடும் பட்சத்தில் மாத்திரமே தாம் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளதாக அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த எத்தனையோ பேருக்கு இன்று வரை மரண சான்றிதழ்கள் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து குறித்து தான் உத்தியோகபூர்வமாக கருத்து வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment