யாழ்ப்பாணம் செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கைதுண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் வவுனியாவைச் சேர்ந்த ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வவுனியாவைச் சேர்ந்த க.ரஜீவன் (வயது 23), முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களான எஸ்.ஜெபர்சன் (வயது 23) ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், திங்கட்கிழமை (27) கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார், சந்தேகநபர்கள் 6 பேரைக் கைது செய்ததுள்ளதாக கூறினர்.

No comments:
Post a Comment