வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின் இணைப்புக்கு விண்ணபித்த நிலையில் 86 கிராமங்களுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
,
யுத்தம் முடிவடைந்த பின் 2009 யூலை மாத காலபகுதியில் வடக்கின் வசந்தம் என்னும் இலவச மின்விநியோக திட்டம் அப்போதைய அரசாங்கத்தால் மீள்குடியேறிய பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் வேலைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களில் அனைவருக்கும் மின்சாரம் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான மூன்று மாத காலப்பகுதியில் வவுனியாவில் 2, முல்லைத்தீவில் 12, மன்னாரில் 3, கிளிநொச்சியில் 13, யாழ்ப்பாணத்தில் 1 என 31 கிராமங்களுக்கு புதிய மின் இணைப்புக்களும் 77 இடங்களில் திருத்த வேலைகளின் பின் மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த நிலையில் வவுனியாவில் 15, முல்லைத்தீவில் 30, கிளிநொச்சியில் 29, மன்னாரில் 8, யாழ்ப்பாணத்தில் 4 என 86 கிராமங்களுக்கு மின் இணைப்புக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. அத்துடன் வடக்கில் 271 இடங்களில் திருத்த வேலைகளின் பின் மின் இணைப்புக்களும் வழங்கவேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment