ஊடகச்செம்மல் வி.ஆர் வரதராஜா அவர்கள் ஜேர்மனி ஒபர் கவுசன் நகரில் மறைந்த செய்திகேட்டு கவலை அடைகின்றோம்.
தாயகத்திலும், ஜேர்மனியிலும் 40 ஆண்டுகளுக்கு மேல் பத்திரிகையாளராகவும், ஊடகவியலாளராகவும் இவர் ஆற்றியுள்ள பணி மிகவும் மதிப்பிற்குரியதாகும்.
ரி.ஆர்.ரி, ஐ.பி.சி வானொலி மற்றும் ரி.என்.என், ஐி.ரிவி தொலைக்காட்சிகளில் ஜேர்மன் மற்றும் அரசியல் சமூக நிலவரங்களைத் தொகுத்து வழங்கியவர்.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளராகச் செயலாற்றியதுடன் ஜெனீவா பத்திரிகையாளர் சங்கத்தில் 35 வருட கால அங்கத்தவர்.
ஊடகத்துறையில் தனக்கென ஓர் இடம் பதித்தவர். பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இவருக்கு பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் 2004ஆம் ஆண்டு ஊடகச்செம்மல் என்னும் கௌரவ விருதளித்தக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி பத்திரிகை செய்தி ஆசிரியராகவும், அரசியல் ஆய்வாளராகவும் ஆரம்பித்த இவரது பயணம் புலம்பெயர்ந்த பின் பாரீஸ் ஈழநாடு, ஈழமுரசு மற்றும் தாயகச் செய்திகளை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் 25 ஆண்டகளுக்கு மேலாக எழுதியவர்.
இவரது மறைவிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகமும் ஐரோப்பிய தலைவருமான துரைகணேசலிங்கம் அவர்களும் அகில நிருவாக மற்றும் ஐரோப்பிய செயலாளருமான தமிழ்மணிப் புலவர் கி.ஜேம்ஸ் அல்ஸ்ரன் மற்றும் ஜேர்மன் கிளைத்தலைவர் இ.இராஜசூரியர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள இரங்கற் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment