March 23, 2015

திருகோணமலை சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் போனோர் பற்றி அறியும் சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை மேல் நம்பிக்கை இல்லை என்பதால் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 09.30 மணயளவில் காணாமல் போனவர்களின் உறவுகள் இந்த கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணமலை மாவட்ட காணாமல்போனோர் சங்கம் ஆகியோர் இணைந்து இக் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
புதிய அரசாங்கம் காணாமல் போன தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்தவும் தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் இதுவரை காலமும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதைத் தவிர அதற்கான முடிவுகள் இதுவரை பெறப்படவில்லை என்று காணாமல் போனோரது உறவுகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.dcp272767646466 (2)dcp272767646466 (3)

No comments:

Post a Comment