மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு
சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை
விதித்துள்ளது. ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தகராறு காரணமாக குறித்த நபர், மனைவியை கொன்று ஆற்றில் வீசியுள்ளார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அந்த நபருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர், 40 வயதான இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெனிவாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த நபருக்கு தன்னுடைய மனைவியுடன் குடும்பம் நடத்த விருப்பம் இல்லாத காரணத்தால், தினமும் மனைவியை சித்திரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் தான் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். மனைவி விவாகரத்து கோரியும், அதை பரிசீலிக்காமால் பழி வாங்கும் நடவடிக்கையாக திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் வீசிவிட்டு தன்னுடைய குழந்தைகளிடம் ‘அம்மா, வேறு நபருடன் ஓடிவிட்டாள்’ என நாடகம் நடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக குற்றவாளிக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
எவ்வாறாயினும் குற்றம் சுமத்தப்பட்டவரின் சட்டத்தரணி ஹயாட், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment