January 25, 2015

தமிழர் ஒருவரை மேல் மாகாண ஆளுனராக நியமித்த சதி திட்டம் !!

இலங்கையில் ஓய்வுபெற்ற மூத்த சிவில்சேவை அதிகாரிகளில் ஒருவரான கே.சி. லோகேஸ்வரன் மேல்மாகாணத்தின் புதிய ஆளுநராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தென் கொரியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதரர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரார், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் இயக்குநர் சபை, நிதியமைச்சின் முன்னாள் ஆலோசகரர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.
ஆய்வு: இலங்கையில் புதிய அரசின் செயல்பாடுகளாக பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவை ஒன்றும் பெரிய மாற்றங்கள் அல்ல. சர்வதேச அளவில் கூட இவ்வகையான மாற்றங்கள் இடம்பெறுவது வழக்கமே. அமெரிக்காவில் கூட ஐனாதிபதி மாறினால் புதிய ஐனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குரிய நியமனங்களையே செய்வார்.
அந்த வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்கள் அனைத்தும் வெறும் மாற்றமே அன்றி முன்னேற்றம் அல்ல. இதனையிட்டு தமிழர்கள் சந்தோசப்படவேண்டியதில்லை.
இது இவ்வாறிருக்க வடக்கில் தமிழ் பேசும் ஒருவரையே ஆளுனராக நியமிக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்டகாலமாக கேட்டு வந்தது. ஆனால் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஆளுனர் சந்திர சிறியை அகற்றிவிட்டு ஒரு சிங்களவரையே நியமித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள் செவி மடுக்கப்படவில்லை.
ஆனால் தமிழ் சமுகத்தினர் ஐ.ஏ சந்திரசிறி போய்விட்டார் என்று சந்தோசப்பட்டுகொண்டிருக்கின்றது. ஆனால் தொடர்ந்தும் ஒரு சிங்களவரே ஆளுனராக நியமிக்கப்பட்டார் என்று கண்டுகொண்டதா ?
இதேபோன்றுதான் மேல் மாகாணத்தில் சிங்களவர் அல்லாத ஒருவரை அதுவும் தமிழர் ஒருவரை ஆளுனராக நியமித்ததன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரை ஆளுனராக நியமிக்கும் வேண்டுகோள் புறக்கணிக்கப்படவுள்ளது.
தமிழ் பகுதியில் தமிழர் ஆளுனராக வேண்டும் என்றால், சிங்கள பகுதியில் சிங்களவர் தானே ஆளுனராக நியமிக்கப்படவேண்டும். ஆனால் இங்கு மேல்மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமித்ததையம் தமிழ தேசிய கூட்டமைப்பு எதிர்க்கவேண்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாயை அடைப்பதற்கு ஒரு வழியாகவே இந்த தமிழர் சிங்கள பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வடக்கு மாகாணசபையில் இராணுவ பின்புலம் அல்லாத புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார அண்மையில் நியமிக்கப்பட்டார் என்று தமிழர்கள் மகிழ்ச்சி கொள்ளுகின்றனர்.
ஆனால் இவர் கடந்த மஹிந்த ராஐபக்ச தலமையில் ஐநாவில் கடுமையாக தமிழர்களுக்கு எதிராக உழைத்தவர். மேலும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான மனித உரிமை விசாரணை தொடர்பில் குறித்த முன்மொழிவை நீர்த்துப்போக செய்ய அரும்பாடு பட்டவர். அந்த அளவுக்கு எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார சிங்கள் அரசின் ஒரு உத்தமர்.
வடக்கில் சிங்களவர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனும் அவசியத்தின் பெயரிலேயே தமிழர் ஒருவருக்கு சிங்கள பகுதியில் ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கிழக்கிலும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்படுவார். இது எதிரியின் எதிர்வு கூறல். இந்த நியமனங்கள் அனைத்துமே உள்நோக்கம் கருதியது குறிப்பு எப்படி பார்த்தாலும் இந்த ஆளுநர் நியமனங்கள் அனைத்தும் மைத்திரிபால அரசுக்கு சாதகமே. காரணம் தற்போது நியமனம் பெற்ற தமிழர் கூட நீண்டகாலமாக சிங்கள் அரசுடன் தான் பணியாற்றிவருகின்றார். அவர் தமிழ் மொழியை விட சிங்கள மொழியை நன்கு பேசுவார் என்பதிலும் ஐயமில்லை. மேலும் நாடு தளுவிய ரீதியில் அனைத்து ஆளுனர்களும் சிறிலங்கா அரசின் அடிவருடிகளே.Gavner

No comments:

Post a Comment