அகதிகள் தஞ்சம் நிராகரிக்கப்பட்டதை யேர்மனி குடிவரவு ஆய்வளர்களினால் மறுபரிசீலனை செய்ய கோரியும் , நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கை நாட்டிக்கு திருப்பி
அனுப்பினால் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாதல் ,காணாமல் போதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேன்டிய நிலையில் யேர்மனி அரசாங்கத்திற்கு எமது நிலைப்பாட்டினை வலியுருத்தி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது .இதில் யேர்மனி அரசியல் வாதிகள் ,மனித உரிமை ஆய்வாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . பாதுகாப்பு தேடி புகலிடம் தேடி வருபவர்களை சிங்கள பேரினவாத அரசிடம் திருப்பி அனுப்ப கூடாது எனவும் கோரப்பட்டு மனு கையளிக்கப்பட உள்ளது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு சாரி சாரியாக மக்களை கொன்று குவித்த போது உலகம் முழுவதும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஐ.நா சபை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக நாடகமாடிக் கொலைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. உலகின் அதிகார மையங்களான அனைத்து நாடுகளும் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டன. தமிழ்த் தலைமைகள் இந்த நாடுகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. இனக்கொலையாளிகளாலும், வியாபார வெறியர்களாலும் தமிழ் மக்கள் சூழப்பட்ட இந்த ஐந்து வருடங்களில், நிலங்க்கள் பறிக்கப்பட்டன, வடக்கும் கிழக்கும் இராணுவமயமாக்கப்பட்டு இராணுவத்தின் காலடியில் வாழுமாறு மக்கள் உத்தரவிடப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டனர், சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்கிறது.
இனச்சுத்திகரிப்பினுள் தமிழ் மக்கள் வாழும் அதே வேளையில் அரசியல் தலைமைகள் அதனை வியாபாரமாக்கிக் கொண்டன. உலகம் முழுவதும் அகதிகள் விதைக்கப்பட்டனர். இலங்கை அரச பாசிசத்தின் கொலைக் கரங்களிலிருந்து தப்பிச் யேர்மனி நாட்டில் அகதி தஞ்சம் கோரினார்கள் .இவர்களில் குறிப்பிட்ட நகரங்களில் விசாக்கள் பறிமுதல் செல்லப்படுகின்றது .சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அப்பாவித் தமிழர்களை நாடுகடத்தி, சித்திரவதைக்கும் கடூழியச் சிறைக்கும் இனவழிப்புக்கும் துணைபோகும் தமிழர் விரோதப் போக்குடைய நாடுகளுக்கு எதிராக நியாயக் குரல்களை எழுப்பி, உலகத் தமிழர்கள் போராடவேண்டியது மிகவும் அவசியமாகும்.
அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனம் UNHCR உலகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளைக் கண்டுகொள்வதில்லை. கடந்தவாரம் இந்த நிறுவனத்தால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மலேசியாவிலிருந்து இலங்கை அரசின் கொலைக்கூடத்திற்கு நாடுகடத்தப்பட்டனர்.
இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்ததை நடத்தி அகதிகளை விடுவிப்பதற்கோ, மலேசிய அரசு மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ UNHCR எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் உலகம் முழுவதுமுள்ள அகதிகளைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட அகதிகளை மீள அழைக்குமாறு கோரியும் சமூக உணர்வுள்ளவர்களின் இலாப நோக்கற்ற போராட்டத்தின் அவசியம் உணரப்படுகிறது.
இந்த நிலையில் யேர்மனி உள்ள டிசில்டோப் நகரத்தில் லன்ரக் பாரளுமன்ற முன்பதாக 15.06.2014 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து அகதிகளுக்கான போராட்டக்குழுவினால் மக்களின் ஆதரவுடன் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முகவரி:
Graf Adolf Platz (Landtgad)
40213 Düsseldorf.
காலம்: 15.06.2014 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: 11:00 மணி .
மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் உணர்வு பூர்வமாக அணிதிரள்வோம். உலகெங்கும் சமகாலத்தில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று வெற்றித்திசையில் பயணிக்க அனைத்துத் தமிழுறவுகளும் எம் தேசியக் கடமையிலிருந்து விலகாது இப்போராட்டத்தில் பங்குபற்றி எமக்கான நீதி கிடைக்கும்வரை இணைந்து பயணிப்போமாக.
தமிழ் வாழ் மக்கள் அனைவரையும் மிக தாழ்மையுடன் அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment