June 7, 2014

கிழக்கு மாகாணத்தில் காணாமற்போனோர் தொடர்பான மகிந்தவின் ஆணைக்குழு அமர்வு



கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் அமர்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று
வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

 இந்த அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது. 




ஆணைக்குழுவின் விசாரணை காத்தான்குடியில் நாளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 


அதற்கமைய இன்று 59 பேரும், நாளை 53 பேரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை 54, 30 பேரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையில் 45 பேர் வரையானோரின் முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன. 



இன்றைய விசாரணைகளின் போது அதிகமானவை குருக்கள் மடத்தில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பிலே விசாரிக்கப்பட்டன.  

No comments:

Post a Comment