நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவிட்டு, இப்போது சொந்த ஊர் திரும்பியுள்ளோம். இருப்பதற்கு என்று எங்களிடம் காணி மட்டுமே உள்ளது.
அதையும் இராணுவத்தினர் அபகரித்தால் நாம் எங்கு செல்வது, இந்த ஆபத்தில் இருந்து எங்களைக் காப்பற்றி - வாழ வழி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருவில்வான் கிராம மக்கள்.
இந்த கிராமத்தில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்க இராணுவத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் குருவில்வான் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய மன்னார் பிரஜைகள் குழுவின் உபதலைவர் எஸ். சகாயம் தலைமையில் மனித உரிமைகளுக்கான ஆர்வலர்கள் மற்றும் குழுவினர் நேற்று வியாழக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தனர். இதன்போதே அப்பகுதிமக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அண்மையில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கிராமவாசிகள் குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தனர்.
''பாலபெருமாள்கட்டு கிராமசேவகர் பிரிவிலுள்ள குருவில்வான் கிராமம் கட்டுக்கரை குளத்தை அண்டிய செழிப்புமிக்க பிரதேசம்.1972ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் எமது தாய் தந்தையர்கள் வாழ்ந்து வந்தனர்.
சுமார் 150 குடும்பங்களாக நாம் வாழ்து வந்தோம். எமது வாழ்வாதாரத் தொழிலாகக் கட்டுகரை குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவந்தோம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாம் இந்தியாவின் தமிழ்நாடு உட்பட இலங்கையின் பல பாகங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தோம்.
இறுதி யுத்தத்தின் பின் தோன்றிய சாதகமான சூழ்நிலையை அடுத்து மீண்டும் எமது கிராமத்துக்குத் திரும்பியபோது, இங்கு எதுவுமே இருக்கவில்லை. எமது காணிகள் வெறும் பற்றைக் காடுகளாகவே காணப்பட்டன.
நாம் காடுகளைத் துப்புரவு செய்து அடிப்படை வசதிகள் இன்றி குடியேறி வாழ்ந்து வந்தோம். பின்னர் அரச மற்றும் அரச சார்பற்றநிறுவனங்களின் உதவிகள் வழங்கப்பட்டன. நாம் இங்கு 42 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றோம். இதற்கான சான்றுகள் பல எம்மிடமுள்ளன.
ஆனால் இப்போது நாம் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளோம் என்று தெரிவித்து, எதுவித முன் அறிவித்தலுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் எமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நாம் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இராணுவமோ அல்லது வனவள ஜீவராசிகள் திணைக்களமோ எம்மை எமது பூர்வீகக் காணியிலிருந்து அகற்ற முடியாது. இங்கிருந்து நாம் ஒருபோதும் வெளியேறமாட்டோம்" - என்று மக்கள் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட மனித உரிமைகளுக்கான ஆர்வலர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், குறித்த விடயம் தொடர்பாகச் சட்டரீதியாக அணுகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தனர்.

No comments:
Post a Comment