August 22, 2016

தலைநகரை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கு: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

டெல்லியை உலுக்கிக் கொண்டிருந்த இளம்பெண் கொலை வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


ஜிகிஷா கோஷ் (28) என்ற இளம் பெண் டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணிபுந்தார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி பணி முடிந்து கால் டாக்சியில், தனது வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்கு வந்திறங்கினார். ஆனால் அதன் பிறகு அவர் மாயமானார்.

இந்நிலையில் 3 நாட்கள் கழித்து அரியானா மாநிலம் சூரஜ்குந்த் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து இறந்த நிலையில் ஜிகிஷாவின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சியில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

மேலும் பத்திரிகையாளர் ஒருவர் 2008ம் ஆண்டு இதே நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது.

தலைநகர் டெல்லியை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஒன்றாக விளங்கிய இந்த வழக்கு டெல்லியில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று குற்றவாளிகள் ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகியோரை தூக்கிலிட்டு கொல்லுமாறு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், மற்றொரு குற்றவாளியான பல்ஜித் சிங் யாதவுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment