August 22, 2016

ரயில் மீது கல் வீசுவோர் மீது இனி துப்பாக்கிச் சூடு!

ரயில் பயணிகளை இலக்கு வைத்து கல் வீவசும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது. இதற்காக 0.38 மி.மீ ரக 25 கைத்துப்பாக்கிகள் ரயில்வே திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த கைத்துப்பாக்கிகள் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வழங்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

 
இந்த ரிவோல்வர்களைக் கொண்டு 15 மீற்றர் தொலைவு வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் மேலும் 25 கைத்துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. ரயில்வே திணைக்களப் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது பழைய துப்பாக்கி வகை ஒன்றையே பயன்படுத்தி வருகின்றனர். புதிய ரிவோல்வர்களை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒரு ரயிலுக்கு இரண்டு ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment