பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையிடம் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களிடம் முதலமைச்சர் இந்த வேண்டுகோளினை விடுத்தார்.
மேலும் அவர் அங்கு தனது கருத்துகளை தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபை இரு கோரிக்கைகளை சென்ற வருடம் செப்டெம்பர் மாதத்தில் முன்வைத்துள்ளது. அவையாவன போர் முடியும் தறுவாயில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பு கூற வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் இருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்பனவாகும். போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக இலங்கை மிகக் குறைவான முன்னேற்றமே கண்டுள்ளது.
இராணுவத்தைக் கண்காணிக்கும் மக்கள் குழுவின் பலத்தை மேலும் வலிமைப் படுத்த வேண்டும் பாதுகாப்புக் கொள்கைகள் பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வடமாகாண மக்களுடன் சீரான உறவைப் பேண அரசாங்கம் தவறிவிட்டது அரசாங்கம் பொறுப்புக் கூறல் விடயத்தில் உண்மையை அறிந்து கொள்ளும் விதத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை. விஷேட உள்நாட்டு நீதி மன்றங்கள் அமைப்பது பற்றித்தான் கூறப்படுகிறது எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், இலங்கை 2009 தொடக்கம் உள்நாட்டு நீதிமன்றங்கள் பற்றிக் கூறி வந்தாலும் எந்தவித நன்மையும் கிட்டப் போவதில்லை. இதை நாங்கள் திரும்பத் திரும்ப எங்கள் மக்கள் கவனத்தில் நிலை நிறுத்த வேண்டும்.
அரசியல் யாப்பு பற்றிய முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டுவந்த நிலையிலேயே உள்ளக விசாரணை மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இங்கு எமது குறைகள் இன்னமும் தீர்மானிக்கப்படாமலேயே இருக்கின்றன.
தீர்க்காத சூழ்நிலையில் பெரும்பான்மை மக்களின் கை ஓங்கியிருக்கும் இந்நிலையில் உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை வழங்குவன என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே சர்வதேச நீதிபதிகளே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எமது பெரும்பான்மையின் நீதிபதிகள் சிங்களவர்களுக்குப் பக்கச்சார்பாகவே இதுவரையில் நடந்து வந்துள்ளார்கள். இந்நாட்டின் உள்ளக விசாரணை நீதியைப் பெற்றுத் தரமாட்டாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே “நீதித்துறை மனக்கிடக்கை” எனும் நூல் அமைந்துள்ளது.
போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை அறிந்தால்தான் நல்லெண்ணத்திற்கு வழி வகுக்கலாம். உள்ளக விசாரணைகள் குமாரபுரம் வழக்குப் போல முடிவடையும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
எனவே பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் வரவே நீதியைப் பெற்றுத்தரும் என்ற விடயத்தை நாங்கள் ஊன்றிக் கூற வேண்டிய ஒரு கடற்பாடு உருவாகியுள்ளது. இந்த விடயத்தை எமது தூதரகங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கூறிக் கொண்டே இருப்பது அவசியம்.
போர்க் குற்றம் பற்றிய சட்டமானது இன்னமும் எமது சட்டவாக்கத்தினுள் உள்ளடக்கப்படவில்லை என்பதை, அறிந்து வைத்திருக்க வேண்டும். தற்போதைய அரசியல் யாப்பின் 13 (6)வது ஷரத்தின் புறவுரையின் பிரகாரமே அவற்றை உள்ளேற்பதாகக் கூறியிருப்பினும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வழக்கு நடத்துனர் நீதிபதிகள் வெளியில் இருந்து வந்தாலும் விசாரணை நடத்தப் போதுமான சட்டம் இன்னமும் எமது சட்டவாக்கத்தினுள் உள்ளேற்கப்படவில்லை என்பதே உண்மை. அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது.
அரசியல் தீர்வைப் பற்றியும் உரக்கக் கூற வேண்டியிருக்கின்றது. எமது அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் எமது இன அடையாளம், எமது நில அடையாளம் எமது பாரம்பரிய கலாச்சார அடையாளம், மொழி அடையாளம், எமது சமூக ஒன்றிப்பு போன்ற பலவற்றை வலியுறுத்தியே எமக்கான சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற வழி வகுக்க வேண்டும்.
மாண்புடனும் பாதுகாப்புடன் நிலைபாட்டுடன் நாங்கள் வாழ வழி காண வேண்டும்.
வடமாகாணத்தில் இருக்கும் பாரம்பரிய சிங்களக் கிராமங்களை அடையாளங் காணுவதும் அண்மையில் நியமிக்கப்பட்ட கௌரவ ரிஷாட் பதியுதீன் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கடற்பாடுகளில் ஒன்று.
வடமாகாணசபை இதனை எதிர்த்துத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதனை எதிர்க்காவிட்டால் எமது தனித்துவம் எமது பாரம்பரியம் எமதுசுயநிர்ணய உரிமை யாவும் பாதிக்கப்படும். அவ்வாறான செயலணியை வாபஸ் பெற வேண்டும் என்று குரல் கொடுப்பதும் அவசியமாகியுள்ளது.
வடமாகாணத்தில் சிங்களக் கிராமங்கள் சென்ற 100 வருடங்களுக்குள்ளேயே வளர்ந்து வந்துள்ளன. அரசாங்கம் மக்களைக் குடியேற்றியே கிராமங்கள் உதித்துள்ளன.
மணலாறு வெலிஓயாவாக அண்மையிலேயே மாறியது. அதைப் பாரம்பரிய சிங்களக் கிராமம் என்பது முழுப் பூசணியைச் சோற்றில் புதைப்பது போன்றது. எந்தெந்தக் கிராமங்களை மனதில் வைத்து அவற்றைப்பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது என்றும் விளங்கவில்லை.
வடமாகாணத்தில் இருக்கும் பௌத்த எச்சங்கள் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்த காலத்துக்கு உரியவையே அன்றி அங்கு பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.
வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மாகாணங்கள். எனவே தமிழ் மொழி நிலைக்க தமிழ் மொழியைப் பேசும் மக்களின் கலாச்சாரம் நிலைபெற பிற கலாச்சாரங்களை உட்புகுத்தி இன அழிப்பை ஏற்படாது தடுக்க வடக்கும் கிழக்கும் இணைந்தே தீர வேண்டும். வட- கிழக்கில் வேண்டுமென்றால் இது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை வைக்கலாம்.
கிழக்கில் சிங்கள மக்கள் பெருவாரியாகக் குடியேறி விட்டார்கள். முஸ்லீம்கள் வடகிழக்கு இணைப்புக்கு ஒத்து வர மாட்டார்கள் என்றெல்லாம் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகக் காரணம் காட்டுகின்றார்கள். நம்மவர்கள் கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது தமது குரல்களை உரத்துக் கத்தியிருந்தால் இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம்.
இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால்
வடகிழக்கு இணைப்பு அவசியம். முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது.
வடக்குக் கிழக்கு இணைவு எமது வருங்கால ஒற்றுமைக்கும் தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்று என்பதைக் கூறி தமிழ் மக்கள் பேரவை மூன்று முக்கியமான விடயங்களை மக்கள் மனதில் விதைக்கப் பாடுபட வேண்டும்.
அவையாவன,
பொறுப்புக் கூறல் கடற்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் பங்கை ஆணித்தரமாக வலியுறுத்தல் வேண்டும்.
அரசியல் தீர்வானது தமிழ் மக்கள் கேட்டவாறு கிடைக்காவிடில் நல்லிணக்கம் ஏற்படாது என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும். பேரவை மக்களிடையே எடுத்துச் சென்றும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென்றும் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டமை குறிப்டத்தக்கதாகும்.

No comments:
Post a Comment