August 20, 2016

முப்பது வருடங்கள் படையினர் வசமிருந்த மைதானம் விடுவிப்பு!

வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தின் மைதானம், படையினரின் 30 வருடக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. அதனைப் பாடசாலை நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டது.


1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிலவிய பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தின் மைதானம் (வவுனியா ஜோசப் முகாம்) விமானப் படையினரால் சுவீகரிக்கப்பட்டது.

இதனால் பாடசாலை மாணவர்கள், 30 வருடங்களாகக் குறித்த மைதானத்தைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

சில வருடங்களாகப் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த மைதானத்தை விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் தொடர்ச்சியாகக் கோரி வந்தனர்.

வவுனியா பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாடசாலை அதிபரின் மைதான விடுவிப்புத் தொடர் பான கோரிக்கையைப் பரிசீலனை செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அதனை விடுவிக்க இணக்கம் தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் மைதானத்தை விடுவித்து அங்கிருந்து படையினர் வெளியேறினர் எனக் கூறப்பட்டது.

No comments:

Post a Comment