மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்கள் விடுதலைக்குவிரைந்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வேறு வழிகள் எதுவும் இன்றிசாத்வீகப் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்.
அரசினால்உருவாக்கப் பட்ட சிறப்பு நீதிமன்றத்தையும் புறக்கணிப்புச் செய்ய வேண்டியதுர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனை மிகவும் வேதனையுடன்தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவினர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ளசெய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நல்லாட்சி அரசின் 8 மாதங்கள் நிறைவடைந்த வேளையிலும் கூட, அரசியல் கைதிகளாகியஎமது விடுதலைக்கான முயற்சிகள் எதுவுமே மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டுஒக் ரோபர், நவம்பர் மாதங்களில் நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச் சாலைகளிலும்தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து உணவுதவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.
எமது போராட்டத்தின் உணர்வுபூர்வமான தன்மையை உணர்ந்து கொண்ட பல பொதுஅமைப்புக்கள், ஊடகங்கள் எல்லாம் எமக்கு ஆதரவாக நாடு தழுவிய ரீதியல் பல கண்டனப்பேரணிகளை நடத்தியது மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுக்கடையடைப்பும் முன்னெடுக்கப்பட்டது.
எமது போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்து கொண்ட தேசிய நல்லிணக்க அரசு உயர்மட்டஅமைச்சர்களான, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாஸ ராஜபக்ச, மனோ கணேசன், பிரதமரின்செயலர் சமன் எக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்,எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எனப் பலரும் எம்மை அணுகியதோடு பலவாக்குறுதிகளையும் வழங்கி எமது உணர்வு தவிர்ப்புப் போராட்டத்தைநிறுத்தி வைத்தனர்.
வழக்குத் தொடரப்படாதவர்கள் உடன் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், வழக்குதொடரப்பட்டவர்கள் ஒரு வருட காலப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்படுவார்கள் என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிமொழி வழங்கியமைக்கு அமைய முதற்கட்டமாக 90அரசியல் கைதிகளிடம் இருந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் புனர்வாழ்வுநிலையத்துக்குச் செல்வதற்கு என்று விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டுஅமைச்சரின் உதவியாளரிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின்போது சட்டமா அதிபரின் உயர் அதிகாரியான பிரதி சொலிசிற்றர்ஜெனரல் சுகத கம்லத் உடன் இருந்தார். அத்துடன் நின்றுவிடாது உணவு தவிர்ப்பைஇடைநிறுத்தி வைத்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த ஆண்டு நவம்பர் 7ம் திகதிக்கு முன் உங்கள்அனைவரையும் ஏதோ ஒரு உபாய மார்க்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கானநடவடிக்கையை விரைந்து பெற்று தருவேன் என்றும் உறுதிமொழி வழங்கிச் சென்றார்.
நவம்பர் கடந்து டிசெம்பர் ஆனது. ஆனாலும் எந்த அமைச்சரும் சொன்ன வாக்குறுதிகளைநிறைவேற்றி வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
அத்துடன் வாக்குறுதிவழங்கிச் சென்ற அரசியல்வாதிகளையும் காணவில்லை. கைவிடப்பட்ட கைதியாக நாம்மட்டும் தனித்து விடப்பட்டுள்ளோம் என்பதுதான் நியாயமான உண்மையாகும்.
தற்காலிக நிவாரணமாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்தநீதிமன்றத்தின் செயற்பாடானது 'எண்ணெய்ச் சட்டியில் இருந்து நழுவி அடுப்பில்விழுந்தது போலானது.
சிறப்பு நீதிமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி ஏற்கனவே நாம் இது சம்மந்தப்பட்டஅரசியல் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும், சிறைச்சாலைத் திணைக்களத்தின்ஊடாகத் தெரியப்படுத்தி உள்ளோம்.
மனிதாபிமானத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளாகிய எங்கள் விடுதலைக்குவிரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேறு வழிகள் எதுவும் இன்றி நாமேசாத்வீகப் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்.
அரசினால்உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தையும் புறக்கணிப்புச் செய்ய வேண்டியதுர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுளோம் என்பதையும் மிகவும் வேதனையுடன்தெரிவித்துக்கொள்கின்றோம். என்றுள்ளது.

No comments:
Post a Comment