இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இடம்பெற்ற கலாசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புனர்நிர்மாணப்பணிகளுக்கு உதவ வேண்டியது தமிழ் புலம்பெயர்வாளர்களின் பொறுப்பாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உட்பட்ட பல நாடுகளின் முயற்சியால், இலங்கையில் இரண்டு முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் கணவர்மாரை இழந்த நிலையில் வாழ்கின்றனர்.
எனினும் இராணுவத்தில் பணியாற்றிய தமது கணவர்மாரை இழந்த பெண்களுக்கு வழங்கும் சலுகைகளை அரசாங்கம், வடக்கு கிழக்கில் உள்ள கணவர்மாரை இழந்த பெண்களுக்கு வழங்கிவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் இந்திய வீடமைப்பு போன்ற ஏனைய நாடுகளின் உதவிகளின் கீழ் மக்கள் பயன்பெறுகின்றனர்.
இதேவேளை வன்னியில் கணவர்மாரை இழந்த பெண்களின் 1.8 லட்சம் பிள்ளைகள், எதிர்கால நிச்சயமற்ற நிலையில் வாழ்வதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களுக்கு உதவ வேண்டிய புலம்பெயர்வாளர்களின் தார்மீக பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட மக்களை தமிழகத்தில் உள்ளவர்கள் உரியவகையில் அறியவில்லை. எனவேதான் தமிழகத்தில் உள்ளவர்கள் வடக்கு, கிழக்கு பிரச்சினையுடன் தமது செயற்பாடுகளை வரையறுத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இந்த மக்கள், வடக்கு கிழக்கு மக்களை போன்றே புறக்கணிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் போது இந்த மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதேநேரம் பெருந்தோட்ட மக்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட அவர்களின் கல்வி மேம்பாடு ஒன்றே வழிவகுக்கும் என்றும் வேலுக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment