ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கு துணை இருந்து செயற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி பயங்கரவாத விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
ஜெயகுமாரிக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஜெயகுமாரிக்கு எதிரான வழக்கு கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் ஊடாக இன்றைய தினம் செவ்வாய்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஜெயகுமாரிக்கு அறிவுறுத்தல் அனுப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயகுமாரிக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment