August 23, 2016

வடக்கில் முதலீடுகளை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பு! - மாவை சேனாதிராஜா !

முதலீடுகள் அரசியல் தீர்வுகளுக்கு அப்பால் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
'முப்பதாண்டு கால போர்ச்சூழலில் எமது முதலீடுகளும், தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த முதலீட்டாளர் சம்மேளனம் முதலீடுகளின் ஆரம்பமாக அமையும். இழப்பீடுகளை சீர் செய்வதற்கு முதலீடுகள் உட்பட வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பூகோள மயமாக்கலின் சவாலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது பொருளாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டியுள்ளது. சர்வதேச சமூகமும் ,புலம்பெயர் தமிழர்களும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பங்களிப்புகளை வழங்க வேண்டும். விதவைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், இழந்து போன இழப்புக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு முதலீடுகள் மூலம் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். பொது மக்கள் வழங்கிய அரசியல் ஆணைக்கேற்பவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment