August 2, 2016

வெலிமடையில் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

வெலிமடை நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில், கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் 45 பதிவாகியுள்ளதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.ஏ.சுகத் ரோகன தெரிவித்தார்.


வெலிமடை பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலகத்தில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

வெலிமடை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருடங்களைவிட, இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எமக்கு கிடைத்துள்ள 45 முறைப்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தோட்டப் பகுதிகளில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கான செயற்றிட்டங்களை எமது திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment