August 2, 2016

39 நாடுகளுடன் உறவுகளை புதுப்பிக்க இந்தியா தீர்மானம்!

வரலாற்று கடல்சார் கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை புதுப்பித்துக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம், இலங்கை உட்பட்ட 39 நாடுகளுடன் புதிய ஏற்பாடுகளை செய்துகொள்ளவுள்ளது. இதற்கு ‘மௌசம்’ ஏற்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்த மௌசம் ஏற்பாட்டுக்கு அமைய இந்திய அரசாங்கம் 39 நாடுகளுடன் உறவுகளை விருத்திச்செய்யவுள்ளதாக இந்திய மத்திய கலாச்சார அமைச்சர் மஹேஸ் சர்மா தெரிவித்துள்ளார்

இதன்போது சீனாவுடன் இணைந்து செயற்படுவது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடுகளுடன் இந்திரா காந்தி தேசிய கலை நிறுவனம் தொடர்புகளை பேணும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்த திட்டத்துக்காக ஏற்கனவே 15கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தின் வரலாற்று அகழ்வாராய்ச்சிகள் உட்பட்ட சமயம் தொடர்பான விடயங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது இந்து சமுத்திரத்தின், அரேபிய குடா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தென்னாசிய வலயங்கள் வரை விஸ்தரிக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment