July 17, 2016

வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவது நியாயமற்றது: Lord Naseby

வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவது நியாயமற்றது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் நேஸ்பெய் பிரபு தெரிவித்துள்ளார்.

ஈராக் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா உள்நாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்தி, இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு கோருவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்குமாறு பிரித்தானியாவும் அமெரிக்காவும் இலங்கையை வலியுறுத்துவது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையானது ஜெனீவா பிரகடனங்களுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment