July 17, 2016

வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் உதவுவோம் ஹரி ஆனந்தசங்கரி!

வடக்கு கிழக்கு மாணவர்களின்  கல்வி முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்த கனடாவில் வாழ்கின்ற உறவுகள் நாம் தொடர்ந்தும் உதவுவோம் என கனடா பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரியின் மகனுமான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.



ஞாயிற்று கிழமை கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கான கடன் வழங்கும் நிகழ்வின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குமபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி எமது மிக்பெரும் அழிக்க முடியாத சொத்து,கல்வியே எங்களுக்கு அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருகிறது எனவே இந்தக் கல்விக்கு நாம் தொடர்ந்தும் உதவி செய்வோம்; குறிப்பாக பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் அது மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது வருடந்தோறும்  பல்கலைகழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வட்டி இன்றி கடன்களை வழங்கி வருகிறது.  குறித்த கடனை அந்த மாணவர்கள் பல்கலைகழக கல்வியை முடித்து வெளியேறி வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்ட பின்னர் கல்வி  வளர்ச்சி அறக்கட்டளைக்கு திருப்பிச்செலுத்த வேண்டும். அவர்கள் அதனை பிரிதொரு மாணவனின் கல்வி வழங்குவார்கள் இவ்வாறு சுழற்சி முறையில் இவ்வுதவித்திட்டம்  வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கன்டா கல்விக் கனைக்சன் அமைப்பு மற்றும் புலம் பெயர் உறவுகள் உதவி வருகிறார்கள். தற்போது முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி அறக்கட்டளை அமைப்பிடம் இருந்து பல்கலைகழக கல்விக்கான உதவிக் கடனை பெற்று வருகின்றார்கள்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தனியார் விருந்தகம் ஒன்றில் கல்வி வளர்ச்சி அறக்கட்ளையின் தலைவர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளைச் சேர்ந்தவர்கள் பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment