July 25, 2016

வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமல்ல!

வடக்குக் கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமற்றது எனவும் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லையெனவும், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக மக்கள் சிந்திக்கவேண்டுமெனவும், மக்கள் விரும்பாத ஒன்றினை நாம் மக்களுக்குத் திணிக்கமுடியாது எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், அடுத்த வருடம் உத்தேச அரசியல் அமைப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.

புதிய அரசியலமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், அதிகாரப் பகிர்வு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கருத்து வெளிவரும் நிலையில் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பிரதான இரண்டு கட்சிகளும் மாத்திரம் சிந்திக்கவில்லையெனவும், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சிந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சகல கட்சிகளினதும் பிரதிநித்துவம் இதில் அடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பினால் நாட்டின் ஒற்றையாட்சிமுறை பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment