July 25, 2016

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர்ந்தார் கனேடியப் பிரதமர்!

கனேடியத் தமிழர்களுடன் உலகெங்கும் வாழும் தமிழர்களால் நினைவுகூரப்படும் 1983 ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை படுகொலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கின்றது என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே தெரிவித்துள்ளார்.


கறுப்பு ஜூலை தொடர்பாக கனேடியப் பிரதமரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளின்போதும், சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போதும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்த உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சிறீலங்காவில் உண்மையான அமைதியைக் கொண்டுவரவும், சிறீலங்கா ஐநாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும், சிறீலங்கா அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுக்கும்.

உண்மையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியைக் கொண்டுவர ஐநா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறீலங்கா அரசாங்கத்தை கனடா தொடர்ச்சியாக ஊக்குவிக்கும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment