July 25, 2016

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை ஆரம்பித்துள்ளது சிறீலங்கா!

ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தயாராக உள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.


ஈரானியத் தலைநகர் தெக்ரானில் ஈரானிய பெற்றோலியத் துறை அமைச்சர் பிஜாம் நம்டார் சன்ஜெனேயுடன் நடத்திய பேச்சுக்களின் பின்பே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈரானும் சிறீலங்காவும் பழைய நெருக்கமான நண்பர்கள் என்றும் எண்ணெய் வளத் துறையில் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டமை சிறீலங்கா மக்களுக்கு நல்ல செய்தி எனவும் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு அமைதிச் சட்டத்திற்கு இணங்கியதையடுத்து, கடந்த 14ஆம் திகதி ஈரானுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment