July 28, 2016

ஐ.பி.சியின் அழைப்பை தடாலடியாக நிராகரித்தது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!

தமது நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஐ.பி.சி நிறுவனம் விடுத்த அழைப்பை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தடாலடியாக நிராகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்களப் படைகளுக்கு வெள்ளையடிக்க முற்பட்டு உலகத் தமிழர்களிடம் மூக்குடைபட்டுப் போன ஐ.பி.சி நிறுவனத்தினர், தம்மை தமிழ்த் தேசியவாதிகளாகக் காண்பிக்கும் நோக்கத்துடன் இவ்வாரம் தமது தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திப்பதோடு, அதில் பங்கேற்குமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு அழைப்பும் விடுத்திருந்தனர்.
எனினும் இதனைத் தடாலடியாக நிராகரித்திருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், தவறான பாதையில் பயணிக்கும் ஐ.பி.சி அமைத்துக் கொடுக்கும் மேடையைத் தாம் இனிமேல் பயன்படுத்தப் போவதில்லை என்று அடித்துக் கூறியிருப்பதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள்
இதனிடையே, சிங்களப் படைகளைப் புகழ்ந்துரைக்கும் வகையில் ஐ.பி.சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி பற்றி கருத்துரைத்திருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும், அறப்போர் செயற்பாட்டாளருமாகிய கோபி சிவந்தன், ஒரு காலத்தில் மாவீரர்களைப் போற்றி வந்த ஐ.பி.சி இன்று தமிழின அழிப்புப் புரிந்த சிங்களப் படைகளைப் போற்றுவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க, உலகத் தமிழருக்கான சிங்களத்தின் உறவுப் பாலமாகத் தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் ஐ.பி.சி நிறுவனத்தின் அறிவிப்பாளர்கள் எவரையும் எதிர்காலங்களில் நடைபெறும் தமிழீழ தேசிய நிகழ்வுகள் எவற்றிலும் மேடையேற அனுமதிக்கக்கூடாது என்ற கருத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள், ஆதாரவாளர்கள் பலரிடையே வலுவடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.<

No comments:

Post a Comment