முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், சந்தேகநபர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி பிணை கோரிக்கையை முன்வைத்தார்.
பிணைச் சட்ட வரையரைகளின் படி, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என இதன்போது குறிப்பிட்ட, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், எனினும் இவர்கள் மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவைத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment