July 12, 2016

பரவிப் பாஞ்சான் காணி விடுவிப்பில் சாதகமான நிலைமை!

பரவிப் பாஞ்சான்  காணி  விடுவிப்பில் இப்பொழுது  சாதகமான நிலைமை உருவாக்கி  உள்ளதாக  கிளிநொச்சி  மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம்  தெரிவித்தார்.


இன்றைய  தினம் பதினோரு  மணியளவில்  பரவிப் பாஞ்சான் காணிகளை  விடுவிக்க  கோரி  காணி  உரிமையாளர்கள் கிளிநொச்சி  மாவட்ட  அரசாங்க  அதிபரிடம்  கிளிநொச்சி  மாவட்ட  செயலகத்தில்  மகயர்  ஒன்றை  கையளித்தனர்  அவ்  மகயரை பெற்றுக்  கொண்ட  அரசாங்க  அதிபர்  ஊடகங்களிற்கு  கருத்துத்  தெரிவிக்கும்  போதே  அவ்வாறு  தெரிவித்தார்.

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்  பரவிப் பாஞ்சானில்   இருந்து  இடம்பெயர்ந்த  மக்கள்  தமது  காணிகளில்  குடியேறுவதற்கு  பல  காலமாக  பல்வேறு  முயற்சிகளை  மேற்கொண்டு  வருகிறார்கள்  இதனால்  அவர்கள்  தங்களது  முறைப்பாடுகளையும்  அவலங்களையும்  வெளிப்படுத்தி  இருந்தார்கள்   இவர்களது  பிரச்சனை  சம்பந்தமாக  எமது  உயர்  மட்ட  அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக  அறியப்படுத்தி  இருக்கின்றோம்   அதற்கான சில  சாதகமான நிலைமை உருவாக்கி  உள்ளது இவர்கள்   இன்று  கையளித்த  மகயரையும்  அனுப்புவேன்   இவர்களுக்கு  குறுகிய  காலத்திற்குள்   இதற்கான  ஒரு  நல்ல  முடிவை  எதிர்பார்க்க  முடியும் என்கின்ற  செய்தியை  என்னால்  கூற  முடியும்  என  தெரிவித்தார்.

இருப்பினும்  தமக்கு  எதிர்வரும் 25 ம்   திகதிக்குள்   முடிவு  எட்டப்படா  விட்டால்  மீண்டும்   தமது  கவனயீர்ப்பு  போராட்டம்  தொடரரும்  என  குறித்த   மகயரில்       குறிப்பிடுகையில்  பரவிப் பாஞ்சான்  மக்கள்  தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment