July 12, 2016

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (12) கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.


சம உரிமை இயக்கத்தினால், மேற்கொள்ளப்பட்ட இந்த கையெழுத்து வேட்டை மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், இராணுவத்தினை முகாம்களுக்குள் மட்டுப்படுத்தி குடியிருப்புக்களில் இருந்து முகாம்களை அகற்ற வேண்டும், காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை நடத்தி அது தொடர்பான விபரங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

No comments:

Post a Comment