July 27, 2016

யாழில் யுவதி மீது சிறீலங்கா காவல்துறை சித்திரவதை!

வடமாகாணசபையின் பேரவை தலைவரது வாகன சாரதியால் ஏமாற்றப்பட்டு அநாதரவாக கைவிடப்பட்ட யுவதியான தர்சிகாவின் போராட்டம் தொடரும் நிலையினில்  விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்ட அவர் கோப்பாய் காவல்நிலையத்தினில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக தெரியவருகின்றது.


மந்திகை வைத்தியசாலையினில் சித்திரவதைகளின் பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் தனக்கு நீதி கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளார்.

தான் காதலித்து ஏமாற்றப்பட்டமை தொடர்பாக கோப்பாய் காவல்நிலையத்தினில் செய்த முறைப்பாட்டின் மீதூன விசாரணைக்கென அழைத்தே தனது ஆடைக்கள் கிழிக்கப்பட்டு தன்மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வடமாகாணசபையின் பேரவை தலைவரது வாகன சாரதியான தர்சன் காவல்நிலையத்திலிருந்து புகைப்படமெடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே ஏமாற்றப்பட்டு அநாதரவாக விடப்பட்டுள்ள குறித்த பெண்ணிற்கு எதிராகவும் வடமாகாணசபையின் பேரவை தலைவரது வாகன சாரதிக்கு ஆதரவாகவும் பல ஆண் வடமாகாணசபை உறுப்பினர்களது அச்சுறுத்தல்களை அவர் எதிர்கொண்டுள்ள நிலையினில் தற்போது வடமாகாணசபையின் பெண் உறுப்பினர் ஒருவரும் தன்னை தொலைபேசி வழி மிரட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment