July 12, 2016

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு?

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மக்கள் தமது சொத்துக்கள் பலவற்றையும் கைவிட்டு வந்த நிலையில், அவ்வாறு கைவிடப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீட்டை கோரும் வகையில், விரைவில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு வாகன உரிமையாளர்கள் உத்தேசித்துள்ளனர்.


இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் 13ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லூரிலுள்ள யாழ்.முகாமையாளர் சங்க அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக, அதன் இணைப்பாளர் வி.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுபவர்கள், 021-2227012 மற்றும் 077 3043206 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பலவும் இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில், பின்னர் அவை எரிந்தும் காணாமல் போயும் இருந்தன.

இந்நிலையில், குறித்த வாகனங்களுக்கான இழப்பீட்டை காப்புறுதி நிறுவனங்கள் வழங்கவேண்டுமென நீண்டகாலமாக வாகன உரிமையாளர் வலியுறுத்திவந்த போதும், காப்புறுதி நிறுவனங்கள் அதற்கு தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடி, தமக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கு வாகன உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

No comments:

Post a Comment