“சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக கிழக்கில் எந்தக் காணியையும் வழங்கத் தயார்” என கிழக்கு முதல்வர் தெரிவித்துள்ள கருத்துக்கு காணி உரிமைகளுக்காக போராடும் பிரஜா அபிலாஷை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பாசிக்குடாவில் இடம்பெற்ற சுற்றுலாத் துறையின் அபிவிருத்தியும் நல்லிணக்கமும் எனும் துணைப்பொருளில் இடம்பெற்ற 50 தேசிய மாநாட்டிலேயே முதல்வர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆனால் வடக்கு கிழக்கில் இந்த காணி அபகரிப்பின் மூலம் எத்தனை மீனவர்களது வாழ்கை சீரழியப் போகின்றது என்பதை கிழக்கு முதல்வர் கவனத்தில் கொள்ள வில்லை என்றும், கிழக்கு முதல்வருக்கு இப்போது காணிகளை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் குறித்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தி, நல்லிணக்கம் என சொல்லிக் கொண்டு பாசிக்குடாவில் அதிகமான தமிழர்கள் இருக்கின்ற இடத்தில் நடந்த மாநாட்டில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட்டுள்ளது. மற்றும் சிங்கள மொழி அரச கரும மொழி என்று சொல்லி இருக்கின்றார்கள் ஆனால் SLTDA மற்றும் UNWTO இணையத்தளங்களில் தமிழும் அரச கரும மொழி என கூறப்படவில்லை அதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த மாநாடு சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் நடத்தியமை நல்லிணக்கமா என கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது ஒரு மீனவனையோ, சிறு விடுதி அமைப்புக்களுக்கோ மாநாட்டில் தங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கருத்து தெரிவிக்க அனுமதிக்க வில்லை. அவர்களை பங்குபற்ற வைத்து மொழி பெயர்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
இன்று இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினர் விடுதிகளை அமைத்து வருகின்றனர். மக்களது காணிகளை அபகரித்து உள்ளனர், கடற் படை முகாம் எனும் போர்வையில் சிறு விடுதிகள் அமைத்து இலாபம் அடைகின்றனர். இவை எல்லாம் தமிழர்களிது காணிகள் என்று கிழக்கு முதல்வருக்கு தெரியாமல் போனது வேடிக்கையாக உள்ளது.
இன்று யுத்தத்துக்கு பின் தமிழர்களது பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன, உதாரணமாக வடக்கில் மாவீரர் துயிலும் இல்லம், திலீபன் நினைவுத் தூபி, என தமிழர்கள் அடையாளம் அழிக்கப் பட்டு ஆனையிறவில் யுத்த வெற்றி என்று கூறி சிலைகளை அமைத்து சுற்றுலா துறை என்கின்றனர்.
அது போன்று முள்ளிவாய்க்காள் என இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம். இந்த நிலை தற்போது இலங்கையில் இருக்கும் போது எவ்வாறு அபிவிருத்தியும் நல்லிணக்கமும் தமிழர்களை சென்றடையும்” என காணி உரிமைகளுக்காக போராடும் அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment