2009ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட் கனகரட்னம்ஆதித்தனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த வழக்கை விசாரணை செய்வற்கு கடும் ஆட்சேபனையை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா முன்வைத்தார்.
சட்டத்தரணி தவராசா தனது வாதத்தில்இந்த வழக்கின் முதல் எதிரியான கனகரெட்னம் ஆதித்தனால் சுய விருப்பில் உதவிப்பொலிஸ் அத்தியட்சருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும்அரச சாட்சியாக கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் ஒரு வழக்குமாக மூன்று வழக்குகள் சட்டமா அதிபரினால் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த மூன்று வழக்குகளிலும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தளபதி சரத் பொன்சேகாஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர்அலிமொகமட் என்பவரின் மரணத்தை விளைவிப்பதற்கு உடந்தையாய் செயல்பட்டதாக ஒருகுற்றச்சாட்டுப் பத்திரமும், யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் 1995ம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் இணைந்துகிளிநொச்சியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது.
யாழ்பாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச சட்டத்தரணியால் அரசதரப்பு சான்றாக முன்வைக்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலம், எதிரியினால் சுயமாக வழங்கப்படவில்லை என யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்29-07-2015ல் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தார்.
மீண்டும் இந்த வழக்குமேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், வழக்கைத் தொடர்ந்து நடாத்த வேறுசாட்சியங்கள் இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதையடுத்துஎதிரி 17-09-2015ல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.
ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் சான்றாகக் கொண்டு பல வழக்குகள் நாட்டிலுள்ளபல மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருப்பினும் ஒரு மேல் நீதிமன்றம் குற்றஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து எதிரியை விடுதலை செய்திருந்தால் மற்றைய மேல்நீதிமன்றங்களில் எதிரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர்திணைக்களம் மீளப்பெறுவதே 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்குகொண்டுவரப்பட்ட நாளிலிருந்து நடைமுறையாகயிருந்தது.
ஆனால் இந்த வழக்கில் அரச தரப்பால் சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாகஏற்க மறுத்து எதிரியை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் விடுதலை செய்து 10 மாதங்களாகின்றது.
ஆனால் சட்டமா அதிபர், இந்த நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை சட்டரீதியாகவழமைபோல் மீளப் பெறாமல் அரச சட்டத்தரணி யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால்நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மீண்டும் இந்த வழக்கில் உண்மைவிளம்பல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென இந்த நீதிமன்றில் கோரிக்கையைமுன்வைப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரைகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கைநடாத்த யாழப்பாணமேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர வேறுஎந்தச் சான்றுமில்லையென்பதை ஏற்றுக்கொணடுள்ள் அரச சட்டத்தரணி யாழப்பாண மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாதெனவும் இந்த வழக்கை இந்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் தனது வாதத்தில்குறிப்பிட்டுள்ளார்.
அரச சட்டத்தரணியின் இந்த வாதம் அடிப்படையற்ற வாதமாகும். ஒரு மேல் நீதிமன்றநீதிபதியின் கட்டளையையோ அல்லது தீர்ப்பையோ அதே நியாயாதிக்கத்தை கொண்ட மற்றையமேல் நீதிமன்ற நீதிபதி கேள்விக்குட்படுத்த முடியாது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரச தரப்பு அதிருப்தியடைந்திருந்தால்அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவையோ அல்லதுமேன்முறையீட்டையோ தாக்கல் செய்யவேண்டும்.
ஆனால் யாழப்பாண மேல் நீதிமன்றம்வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில்மேன்முறையீடு செய்யவில்லை.
வடக்கிற்கு ஒரு சட்டமா அதிபர் தெற்கிற்கு ஒரு சட்டமா அதிபர் எனில் அல்லது வடக்கும்தெற்கும் இரண்டு நாடுகளாகயிருப்பின் அரச சட்டத்தரணியின் வாதத்தை நீதிமன்றம்ஏற்றுக்கொள்ள முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தைமுன்வைத்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரைகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைசெய்ய வேண்டுமென அரச சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து எதிரியைவிடுதலை செய்ய வேண்டும் என தனது வாதத்தை தொடர்ந்தார்.
இதனையடுத்து விசேட மேல் நீதிமன்றஆணையாளர் ஜராங்கனி பெரேரா தனது தீர்ப்பை ஆடி மாதம் 27ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment