ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை விதிக்க சர்வதகேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஷ்ய வீரர், வீராங்கனைகளின் ஊக்க மருந்து விவகாரத்தில்
ரஷ்ய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதால் இந்த அதிரடி முடிவை எடுக்க சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ள 387 வீரர், வீராங்கனைகளுக்கும் ரியோ போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளது. ஊக்க மருந்து விவகாரத்தில் ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையையும் களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ரஷ்யாவைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் எடுக்கவுள்ளதாம்.
No comments:
Post a Comment