July 12, 2016

ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல் - வெற்றி பெற்றதாக பிரதமர் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொது தேர்தலுக்கு எட்டு நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல், தான் வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன ஆனால் அவரின் பழமைவாத தேசிய -லிபரல் கூட்டணி ஆளுவதற்கு போதிய இடங்களைக் கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

 
செய்தியாளர்களிடம் பேசிய டார்ன் புள், இந்ததேர்தலில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டியது முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் டர்ன்புல் தனது நிலையை பலப்படுத்தும் நோக்குடன் இந்த தேர்தலை நடத்தினார். ஆனால் குறைந்த வாக்குகள் கொண்டு வெற்றி பெற்றுள்ளதால் அவர் சிறிய கட்சிகளையும் சுயேட்சையாளர்களையும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரான பில் ஷார்டன் இந்த அரசு ஸ்திரமற்றதாக இருக்கும் என்றும் அது குறைந்த காலமே நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment