July 17, 2016

தான்தோன்றீஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத் திருவிழா!

ஈழத்தின் புராதன சிவ ஆலயங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத் திருவிழா இன்று(சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.


ஈச்சரங்கள் கண்ட ஈழ மண் என சிறப்பிக்கப்படும் ஈழ வளநாட்டில் உள்ள சிறப்புமிகு சிவாலயங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரமும் ஒன்றாகும்.

வட மாகாணம் வன்னிப் பெருநிலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டானில் எழுந்தருளிய ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மூல மூர்த்தி தானாக தோன்றிய சிறப்பினால் தான்தோன்றீச்சரம் என அழைக்கப்படுகின்றது.

ஆலயத்தின் தொன்று தொட்டு இடம்பெறும் வழிபாட்டு முறைகளும் வழிபாட்டுடன் தொடர்புடைய கிராமிய நிகழ்வுகளும் இந்த ஆலயத்தின் புராதானத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன.

ஆனி மாத அமாவாசையுடன் ஆரம்பித்து 16 நாட்கள் நடைபெறும் மகோற்சவத்தில் பதின்மூன்றாம் நாளாகிய இன்று நடைபெற்ற வேட்டைத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


No comments:

Post a Comment