July 17, 2016

இராணுவ புரட்சியை முறியடித்த மக்கள் சக்தி! வியப்பில் உலகம்!

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.


இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது பலியாகியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது. பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும், 41 பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2800 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசை கைப்பற்ற துருக்கி இராணுவம் நேற்று நள்ளிரவில் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியான எரோடகன்னின் ஆதரவு படை சாதகமாக இருந்ததால் கலகக்காரர்களை கொன்று ஆட்சி கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ ஆட்சியை நிறுவ முயன்ற கலகக்காரர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி எரோடகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி வரலாற்றில் இதுவரை 5 முறை ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு இராணுவம் முயற்சி செய்துள்ள நிலையில், துருக்கியில் ஜனநாயகம் காக்கப்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்றவர்களை மக்கள் அணி திரட்டு முறியடித்துள்ளதுடன், அவர்களுடன் மோதலிலும் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான காட்சிகள் இணையத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














No comments:

Post a Comment