July 29, 2016

முல்லைத்தீவில் இருபது இலட்சங்கள் ரூபாய் வாழ்வாதார/மேம்பாட்டு உதவி வழங்கல்.!

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்டங்களுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், முல்லைத்தீவு
மாவட்டத்தில் இருபது இலட்சங்கள் ரூபாய் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டது. 29.07.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு முல்லைத்தீவு கிராமிய அபிவிருத்தி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு யோ.புரட்சி தலைமை வகித்தார். வட மாகாண கிராமிய அபிவிருத்தி மீன்பிடி வர்த்தக வாணிப போக்குவரத்து வீதி அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரன், குறித்த அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் சிவனேசன், ரவிகரன், முல்லைத்தீவு பங்குத்தந்தை அன்ரனிப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன், வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் பெலிசியன் ,முல்லைத்தீவு மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வில்வராஜா, முல்லைத்தீவு மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் மாலினி பாஸ்கரன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தனிநபர் வாழ்வாதார உதவிகளும், கிராமிய மட்ட பொது அமைப்புக்களுக்கான உதவிகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது. வட மாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் இவ்வுதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment