மாந்தை கிழக்கு உதவி பிரதேசசெயலருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சென்ற மக்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் உறுதிமொழியை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
தமது பிரசேத்திற்கு தண்டைனை இடமாற்றம் பெற்றுவரும் பிரதேச செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என எதிர்ப்புத்தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 90 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளரான இ.ரமேஸ் தமது பகுதிக்கு நியமிக்கப்பட்டு குறுகிய காலத்தில் பல அபிவிருத்திகளை திறம்பட செய்துவருவதாகவும் சட்டவிரோத செயற்ப்பாடுகளான கசிப்பு, மரக்கடத்தல் சட்டவிரோத மண்ணகழ்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருவரை நியமிக்கபோவதில்லை எனவும் இந்தவிடயம் தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று மக்களுக்கு சாதகமான பதிலொன்று அமையும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment