மஹிந்த குடும்பத்தில் யாரும் உயர் தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை கபுருபிடிய பிரதேசப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி நேற்று கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மஹிந்த குடும்பத்தினர் அனைவருடைய உயர்தரப் பெறுபேற்றை ஒன்று படுத்தி பார்த்தாலும் 4S க்கு சமனாகாது. அவ்வாறு கிடைக்கப்பெற்றிருந்தால் அவருடைய பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை கட்டியிருப்பார் என விமல் ரத்நாயக்க கூறினார்.
மஹிந்தவின் பெயரில் வீதிகள், விமான நிலையம், துறைமுகம் அரங்குகள் போன்றவை இருக்கின்றன. ஆனால் பல்கலைக்கழகம் மட்டுமே இல்லை. இதற்கு காரணம் அவரது குடும்பத்தில் யாரும் உயர்தரத்தில் சித்தியடையவில்லை என்பதாகும் என குற்றம் சுமத்தினார்.
மேலும், மஹிந்த இலங்கையை பல வகைகளில் மாற்றியமைப்பதாக கூறினார். ஆனால் எதையும் செயற்படுத்தவில்லை.
இலங்கை எப்பொழுதும் கடற்போக்குவரத்திற்கு ஒரு முக்கிய இடமாக காணப்படுகின்றது. இதை மஹிந்த தெரிந்து கொள்ளவேண்டுமாயின் உலக வரைப்படத்தை தலைகீழாக போட்டுப் பார்க்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment