June 4, 2016

தந்தையின் கையில் இருக்கும் கோல் குறித்து வெளிப்படுத்தினார் நாமல் !

எனது தந்தையின் கையிலிருப்பது வசியக்கோல் அல்ல, அது உடலில் ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்த பயன் படுத்தும்
ஒருவகை பொருளென மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மைகயில் தொலைக்காட்சி நிகழ்சியியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருகாலத்தில் மஹிந்த ராஜபக்கஷ என்ற பாத்திரத்திற்கு சேறுபூசும் செயல்களில் ஈடுபடுவதற்காக அவர் அணிந்திருந்த உடை, கையில் வைத்திருந்த பொருள், தலை சீவும் முறை முதல் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வரும் போது இருந்தவர்களே இன்று அவருக்கெதிராக சேறுபூசும் செயலில் ஈடுபடுகின்றனர்.

No comments:

Post a Comment