June 22, 2016

மாணவி கவலைக்கிடமான கொடூரமான ராக்கிங்க் !

toilet கிளீனரை குடிக்க வைத்து ராக்கிங் செய்யப்பட்ட கேரள மாணவி, கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் அருகேயுள்ள எடப்பாலை சேர்ந்த அஸ்வதி என்ற 19 வயது மாணவி, கர்நாடக மாநிலம், குல்பர்காவில் உள்ள அல் ஓமர் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார்.
சில சீனியர் மாணவிகள், அந்த மாணவியை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்துள்ளனர். கடந்த மே 9 ம் தேதி, விடுதி அறையில், கழிவறையை சுத்தப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
இதற்கு அந்த மாணவி எதிப்பு தெரிவித்து, அதனை செய்ய மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சீனியர் மாணவிகள், அந்த மாணவிக்கு டாய்லெட் கிளீனரை ஆசிட்டில் கலந்து கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியுள்ளனர்.
இதில் அந்த மாணவி ரத்த வாந்தி எடுத்துள்ளார். முதலில் குல்பர்காவில் தனியார் மருத்துவமனையில் அஸ்வதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமானதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
தற்போது அஸ்வதி, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் உணவுக்குழாய் முற்றிலும் வெந்து போய்விட்டதாகவும், இந்த சூழலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது என்பதாலும், 6 வார காலம் கழித்தே எதுவும் செய்ய முடியுமென்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குல்பர்கா போலீசில் இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்த போது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த மே மாதம் 9 ம் தேதி நடந்த இந்த சம்பவம், தற்போதுதான் மீடியா வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தலித் சமூகத்தை சேர்ந்த அந்த மாணவி, 4 லட்ச ரூபாய் லோன் வாங்கிதான் நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment