June 12, 2016

கருணா சுதந்திரமாக இருக்கும் நிலையில் நான் பணியில் இருந்து நீக்கப்பட்டேன்:முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்!!

பொலிஸாரை சுடுமாறு உத்தரவிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் இன்று சுதந்திரமாக இருக்கும் நிலையில்,
தவறு செய்யாத நான் எதற்காக பணியில் இருந்து நீக்கப்படவேண்டும் என முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மனோஜ் பியந்த சிறிவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

பணியில் இருந்து நீக்கிய தம்மை மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மனோஜ் பியந்த சிறிவர்த்தன குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் தனது குடும்பத்துடன் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் அம்பாறை – கஞ்சிக்குடியாறு ரூபஸ் குளம் காட்டுப்பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 11 ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 123 பொலிஸார் உத்தியோகத்தர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் காயங்களுடன் தப்பிய தாம் பணியில் இருந்தபோது அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி, பெரிலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பாக மீள்பரிசீலணைசெய்ய விண்ணப்பித்த நிலையில், இதுவரை தனக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் வரவில்லை என சுட்டிக்காட்டினார்.

இதனால்எ தனக்கு நீதிவேண்டும் கடமையில் இருந்து விலகிய காலம் தொடக்கம் வேதனம் வழங்கி மீண்டும் வேலை வழங்கவேண்டும்.

அதுவரை மனைவி பிள்ளைகளுடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுப்போவதாக முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான மனோஜ் பியந்த சிறிவர்த்தன தெரிவித்தார்.

No comments:

Post a Comment