June 5, 2016

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களின் தேவைகள் அறியாது செயற்படுகின்றனர்- சி.வி.விக்னேஸ்வரன்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களில் பலர் மக்களின் தேவைகள் என்ன என்பது தொடர்பில் எந்தவித கரிசனையும் இன்றி செயற்படுகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆடைத் தொழிற்சாலையொன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “எமது மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எமது அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதாவது இருந்தால் எழுத்தில் ஆதாரத்துடன் தந்தால் உடனே உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்று கூறிய பின்னரும் சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவரத் தயாராகின்றார்கள்.
ஒருவரின் குற்றங்கள் கையுயர்த்தி ஏற்கப்படும் விடயங்கள் அல்ல. தாருங்கள் நான் உரியவர்களைக் கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என்றால் எதையும் என்னிடம் கையளிக்காமல் சபையில் சாட விரும்புகின்றார்கள்.
அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள். ” என்றுள்ளார்.

No comments:

Post a Comment