June 1, 2016

நடேசனின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் வேண்டும்!

மட்டக்களப்பில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் இன்று முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.


படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கக்கோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எதனையும் நேருக்கு நேர் பேசும் திறமை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்ப்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.இன்றும் கூட நல்லாட்சி என்ற ஒரு பொய்யான அரசாங்கத்துக்கு மத்தியிலும் துணிந்து செயற்படும் ஊடகவியாலாளன் அச்சுறுத்தப்படுவது இன்று வரை நிறுத்தப் படவில்லை.


மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிககள் அரசியல் பிரதிநிதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment