இந்தியாவுக்கு திருப்பியனுப்ப அதிகாரிகள் தீர்மானம்இந்தோனேசியாவின் அச்சே பிராந்தியத்தில் நிர்க்கதியாகியுள்ள படகில் இருந்து இலங்கை அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இந்தோனேசிய மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அகதிகள் தரையிறங்கி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்திக்கவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.
இந்த படகில் கர்ப்பிணி தாய் ஒருவர் உட்பட்ட 44 பேர் உள்ளனர். இதேவேளை, இந்த படகை இந்தியாவை நோக்கி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றுஇந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கொடியுடன் இந்த படகு பயணிப்பதால், எரிபொருள் மற்றும் அதிலுள்ளவர்களுக்குஉணவுகளை வழங்கி, படகை இந்தியா நோக்கி அனுப்ப அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment