June 16, 2016

போரின் பின்னரும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன! சரத் பொன்சேகா!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் இரண்டு ஆயுதக் களஞ்சியங்கள் வெடித்திருந்ததாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீரவல மற்றும் 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மத்தோகொட ஆகிய முகாம்களின் ஆயுதக் களஞ்சியங்கள் வெடித்திருந்தன.

அந்தக் காலத்தில் அவர் இராணுவத் தளபதியை விலக்கவில்லை. மேலும் இராணுவத் தளபதியை நீக்கி கைகளைத் துடைத்துக்கொள்ள முடியாது. சரியனால் அவரும் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும்.

போரின் பின்னர் பயன்படுத்தாத ஆயுதங்களை விற்பனை செய்திருக்க வேண்டும். எனினும் கோத்தபாய அதனை செய்யவில்லை.

உடற்பயிற்சி நடைபாதைகள், விக்டோரியா பூங்கா போன்றவற்றை நிர்மாணிப்பதில் கோத்தபாய சிரத்தை காட்டியிருந்தார்.

எனினும் ஆயுதக் களஞ்சியம் பற்றி கவனம் செலுத்தவில்லை.

தரகுப் பணம் பெற்றுக் கொள்வதற்காக போர் நிறைவடைந்த பின்னரும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment