சூளைமேடு சுவாதியை கொலை செய்த கொலையாளியை தேடி மைசூர், பெங்களூர் என்று பயணித்துள்ளது தமிழக காவல்துறை. கொலையாளியை கைது செய்ய ஹைகோர்ட் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது.
இதேபோல கடந்த ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட சூளைமேடு அருணாவின் கொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. குற்றவாளி யார் என்று தெளிவாக தெரிந்தும் அவனை கைது செய்ய முடியாமல் இன்னமும் தடுமாறி வருகிறது போலீஸ்.
சுவாதி கொலையைப் போலவே அருணாவின் கொலையும் கொடூரமானதுதான். ஏழைப்பெண் அருணாவை கொடூரமாக கொலை செய்தவன் யார் என்பது தெரிந்தும் இன்னமும் அவனை கைது செய்ய முடியவில்லை என்பதுதான் கொடுமை.
இந்திய உணவுக் காப்பீட்டுக் கழக மூன்றாண்டு பயிற்சியை முடித்து விட்டு மத்திய அரசுப் பணியில் அதிகாரியாக, காத்திருந்த வேளையில் தான் அருணா கடந்த, 2015 மார்ச் மாதம் 9ம்தேதி காதலன் தினேஷால் கொலை செய்யப்பட்டார்.
அருணா கொலை
சென்னை தலைமைச்செயலக காலனி, பராக்கா ரோட்டில் உள்ள வி.ஜே.அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி கண்ணப்பன் வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி ஒரு படுகொலை நடந்தது. கண்ணப்பன் இருதய ஆபரேஷனுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
தினேஷ்
அவரது மகன் தினேஷ் பொறியியல் பட்டதாரி. சூளையை சேர்ந்த கல்லூரி மாணவி அருணாவை தினேஷ் காதலித்தார். சம்பவத்தன்று இரவு தினேஷ் தனது வீட்டுக்கு அருணாவை அழைத்து வந்தார்
கொடூர கொலை அப்போது அருணாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. ஆசைக்கு இணங்க மறுத்த அருணாவை, தினேஷ் கொடூரமாக கொலை செய்து பிணத்தை காரில் கடத்திச் செல்ல முயன்று முடியாமல், காரிலேயே சடலத்தை வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
தப்பி ஓடிய கொலையாளி சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் தப்பி ஓடிய தினேசை கைது செய்ய, 4 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டும் எந்தவித பலனும் இல்லை. தினேசை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை
தேடப்படும் குற்றவாளி தினேஷை தேடப்படும் குற்றவாளியை அறிவித்து அவனைப்பற்றிய தகவல் அடங்கிய புகைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. வாட்ஸ் அப்பிலும் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டது.
கைது செய்யாத போலீஸ் கொலை நடந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் தினேசை இன்னும் பிடிக்க முடியவில்லை. சென்னையில் காதலியை கொடூரமாக கொலை செய்து விட்டு இப்போது எங்கோ ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறான் தினேஷ்.
மயான அமைதியில் வீடுகள் சுவாதியின் வீடு இருக்கும் அருகில்தான் இருக்கிறது அருணாவின் வீடு. கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாகவே மயானம் சூழ் இருளில் கிடக்கிறது அருணாவின் வீடு. சுவாதியின் கொலை குற்றவாளியை தேடும் அதே நேரத்தில் அருணாவின் கொலைக்கும் நீதி கிடைக்கும் வகையில் கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்

No comments:
Post a Comment