June 23, 2016

இராணுவத்தினரால் கல்விச் செயற்பாடுகள் பாதிப்பு! - அமெரிக்க குழுவிடம் அதிபர் முறைப்பாடு !

பாடசாலை சூழலில் இராணுவம் நிலை கொண்டிருப்பதால், கல்வி நடவடிக்கைகளை சுமூகமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாத சூழல் காணப்படுவதாக காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் குழுவொன்று, அண்மையில் விடுவிக்கப்பட்ட நடேஸ்வரா கல்லூரியை சென்று பார்வையிட்டபோதே, அதிபர் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 
குறித்த பிரதேசத்திலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட்டு, மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெற்றால் மாத்திரமே கல்வி நடவடிக்கைகளை கிரமமாக முன்னெடுத்துச் செல்லலாமென பாடசாலையின் அதிபர் இதன்போது அமெரிக்க குழுவிடம் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment